Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இழுத்துக் கொண்டே செல்லும் வேட்டையன் ஷூட்டிங்…. அப்செட்டில் ரஜினி!

vinoth
புதன், 24 ஏப்ரல் 2024 (09:40 IST)
ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் இப்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் பூஜை சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் நடந்தது. முதல் கட்ட ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர்.

படத்தின் பெரும்பாலானக் காட்சிகள் தென் தமிழ்நாடு, மும்பை மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டன.  இப்போது விறுவிறுப்பாக இறுதிக் கட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. ஏப்ரல் மாதத்தோடு மொத்த ஷூட்டிங் நிறைவடையும் என சொல்லப்பட்டது. அதனால் ரஜினி அடுத்த் மாதம் முதல் லோகேஷ் படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்ளலாம் என திட்டமிட்டிருந்தாராம்.

ஆனால் வேட்டையன் ஷூட்டிங் இப்போது அடுத்த மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாம். இதனால் படக்குழு மீது ரஜினி கொஞ்சம் அதிருப்தியில் உள்ளதாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments