Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரி ரிலீஸில் ஷோலே சாதனையை முறியடிக்குமா விஜய்யின் கில்லி?

vinoth
புதன், 24 ஏப்ரல் 2024 (07:25 IST)
தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன கில்லி திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அதற்கு முக்கியக் காரணம் படத்தை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு மாற்றியிருந்தார் இயக்குனர் தரணி. 2004 ஆம் ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூலை செய்த படமாக கில்லி அமைந்தது. இந்த படத்தின் மூலம்தான் முதலாக த்ரிஷா விஜய் வெற்றிக் கூட்டணி அமைந்தது.

இந்த நிலையில் இந்த படம் வெளியாகிய 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த படத்தை ஏப்ரல் 20 ஆம் தேதி சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் ரி ரிலீஸ் செய்துள்ளது. படம் கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட திரைகளில் ரி ரிலீஸ் செய்துள்ளதாக சொல்லப்படும் நிலையில் முதல் நாளில் மட்டும் 4 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இரண்டாவது நாளிலும் இந்த படத்துக்கு ரசிகர்களின் வரவேற்புக் குறையவில்லை. இதனால் 2 நாட்களில் இந்த படம் 8 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இப்போது கில்லி திரைப்படம் 10 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாம். இதற்கு முன்னர் ரி ரிலீஸில் ஷோலே படம்தான் இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தது. அதன் பின்னர் கில்லி திரைப்படம்தான் 10 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. விரைவில் ஷோலே வசூலை கில்லி முந்தும் என பேசப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments