Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரி ரிலீஸிலும் வரவேற்பைப் பெறும் வேட்டையாடு விளையாடு… ரசிகர்கள் கொண்டாட்டம்!

ரி ரிலீஸிலும் வரவேற்பைப் பெறும் வேட்டையாடு விளையாடு… ரசிகர்கள் கொண்டாட்டம்!
, சனி, 24 ஜூன் 2023 (08:36 IST)
இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் கமல் நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளியான வேட்டையாடு விளையாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. ஆனால் அந்த படத்தின் தயாரிப்பாளர் செவந்த் சேனல் மாணிக்கம் நாராயணனுக்கு இந்த படம் எந்த லாபத்தையும் பெற்றுத்தரவில்லை என அவரே பலமுறைக் கூறியுள்ளார்.

ஆனாலும் படத்தின் பல காட்சிகள் இன்றளவும் இணையத்தில் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. இந்நிலையில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படம் டிஜிட்டலில் புத்துருவாக்கம் செய்யப்பட்டு நேற்று கிட்டத்தட்ட 70 திரைகளில் ரிலீசானது. நேற்று புதுப் படங்கள் 7 ரிலீஸான நிலையிலும் இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பல திரைகளில் முதல் காட்சி ஹவுஸ்புல்லாக ஓடியுள்ளது. படத்தை பார்த்த ரசிகர்கள் ‘இப்போது பார்த்தாலும் படம் கூஸ்பம்ப் மொமண்டை தருகிறது’ என சிலாகித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாமன்னன் படத்துக்கு எதிரான வழக்கு… ரெட் ஜெயண்ட் மூவிஸ்க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!