தனுஷின் நடிப்பில், பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் உள்ளிட்ட படங்களை இயக்கி ப்ளாக் ப்ஸ்டர் ஹிட் இயக்குனராக தமிழ் சினிமாவில் அவதாரமெடுத்திருப்பவர் இயக்குனர் வெற்றி மாறன். இவர் தற்போது சூர்யாவை வைத்து வாடிவாசல் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் ஷூட்டிங் இல்லாத சமயத்தில் வெற்றிமாறன் வேடந்தாங்கல் அருகேயுள்ள கட்டியாம்பந்தல் என்ற கிராமத்தில் 9 ஏக்கர் நிலம் வாங்கி பசுமை பண்ணை அமைத்து விவசாயம் செய்து வருகிறாராம். அதுமட்டுமில்லாமல் கூடிய விரைவில் அங்கேயே வீடு கட்டி செட்டில் ஆகப்போவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து கூறிய வெற்றி மாறன் , "வேடந்தாங்கலுக்கு வரும் பறவையினங்களும், பறவைகளுக்காக தீபாவளி கொண்டாட்டத்தையே தியாகம் செய்யும் மக்களின் மனசும் தான் வேடந்தாங்கலில் நிலம் வாங்கியதற்கு காரணம் என அவர் கூறியுள்ளார்.
கருப்பு ட்ரஸ்ஸில் ஸ்டைலான போஸ் கொடுத்த ராஷிகண்ணா… லேட்டஸ்ட் ஆல்பம்!
சீதாராமம் புகழ் மிருனாள் தாக்கூரின் அட்டகாச போட்டோ ஆல்பம்!
சில்க்கி சேலையில் கிளாமர் போட்டோஷூட் நடத்திய திவ்யபாரதி போட்டோஷூட்!
துல்கர் சல்மான் நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'லக்கி பாஸ்கர்' செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகிறது!
இவ்ளோ பெரிய ஹிட்டு கொடுத்துட்டு ஏன் சின்னப்படம்.. கலகலப்பு 3 –ஐ கைவிட்டாரா சுந்தர் சி?