Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெற்றிமாறன் - ராகவா லாரன்ஸ் படத்தின் டைட்டில் இதுதான்! இயக்குனர் யார் தெரியுமா?

வெற்றிமாறன் - ராகவா லாரன்ஸ் படத்தின் டைட்டில் இதுதான்! இயக்குனர் யார் தெரியுமா?
, வியாழன், 24 ஜூன் 2021 (19:06 IST)
வெற்றிமாறன் - ராகவா லாரன்ஸ் படத்தின் டைட்டில் இதுதான்! இயக்குனர் யார் தெரியுமா?
பிரபல தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் உருவாகும் ஒரு மாஸ் திரைப்படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என ஏற்கனவே செய்தி வெளியானது
 
அதன்படி சற்று முன்னர் அந்த அறிவிப்பு 5 ஸ்டார் கதிரேசன் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு அதிகாரம் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. வெற்றிமாறன் கதை வசனத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் இந்த படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கவுள்ளார். துரை செந்தில்குமார் எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி மற்றும் பட்டாஸ் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது தெரிந்ததே
 
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும், இந்த படத்தில் நடிக்கும் நாயகி உள்பட மற்ற நடிகர்களின் அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராஷ்மிகாவை பார்க்க 900 கிலோ மீட்டர் நடை பயணம் மேற்கொண்ட ரசிகர்!