‘அரசன்’ ப்ரோமோவைக் கொண்டாடித் தள்ளிய ரசிகர்கள்… 20 மில்லியன் பார்வைகள்!

vinoth
செவ்வாய், 21 அக்டோபர் 2025 (10:12 IST)
சிம்பு மற்றும் வெற்றிமாறன் இணைந்து உருவாக்கவுள்ள ‘அரசன்’படத்தின் முன்னோட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாவதற்கு முதல் நாளே திரையரங்குகளிலும் வெளியாகி ரசிகர்களின் ஆதரவைப் பெற்றது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, வேல் ராஜ் ஒளிப்பதிவை மேற்கொள்ள கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார்.

ஐந்து நிமிடம் ஓடும்படி உருவாக்கப்பட்ட அந்த வீடியோவில் “சிம்பு கதாபாத்திரம் கோர்ட்டுக்கு வெளியே திரைப்பட இயக்குனரான நெல்சனிடம் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த உண்மைக் கதையை சொல்லப் போவதாகவும் ஆனால் அதை அப்படியே படமாக எடுத்தால் பிரச்சனை என்பதால் அது கற்பனைக் கதை என்று போட்டுவிட்டு படத்தைத் தொடங்க வேண்டும் எனவும் சொல்கிறார்.

பின்னர் கோர்ட்டுக்குள் செல்லும் அவர் தன் மேல் சுமத்தப்பட்டிருக்கும் மூன்று கொலைகளையும் தான் செய்யவில்லை என சொல்ல, காட்சி துண்டிக்கப்பட்டு மற்றொரு இடத்தில் சிம்பு முகம் முழுக்க ரத்தத்தோடு கையில் அரிவாளோடு நடந்து செல்லும் காட்சி ஸ்லோமோஷனில் இடம்பெற்றிருந்தது. இந்த காட்சிகளுக்கு அனிருத் மாஸ் ஆக இசையமைத்திருந்தார். இந்த ப்ரோமோ காட்சி ஆக்‌ஷன் படப்பிரியர்களுக்கும் சிம்பு ரசிகர்களுக்கும் ஒரு கொண்டாட்டமாக அமைந்தது. இந்நிலையில் இந்த ப்ரோமோ காட்சி இணையத்தில் சுமார் 20 மில்லியன் பார்வைகளைக் கடந்து ஹிட்டடித்துள்ளது. இதற்கிடையில் இந்த ப்ரோமோவில் இடம்பெறும் சிம்புவின் கதாபாத்திரம் சென்னையில் வாழ்ந்த பிரபல ரௌடி மயிலை சிவாவின் தழுவலில் உருவாக்கப்பட்டுள்ளது என விவாதம் கிளம்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தொடங்கியது கவினின் ‘மாஸ்க்’ பட வியாபாரம்… டிஜிட்டல் உரிமத்தைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

மகுடம் படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

வசூலில் பட்டையக் கிளப்பும் ‘ட்யூட்’… மூன்று நாளில் 66 கோடி ரூபாய்!

இரண்டாவது சிம்ஃபொனியை எழுதவுள்ளேன்… தீபாவளி நாளில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இசைஞானி!

தியேட்டர்ல்ல ஒரு ஹிட் கொடுக்க தெரியல, என்ன கிண்டல் பண்ண வந்துட்டாங்க.. சூர்யா ரசிகர்களை பொளந்த மோகன் ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments