Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரே படத்தில் ஜூனியர் என் டி ஆர் & தனுஷ்.. வெற்றிமாறன் படம் பற்றி இணையத்தில் பரவும் வதந்தி!

ஒரே படத்தில் ஜூனியர் என் டி ஆர் & தனுஷ்.. வெற்றிமாறன் படம் பற்றி இணையத்தில் பரவும் வதந்தி!
, புதன், 8 மார்ச் 2023 (08:29 IST)
தொடர்ந்து வெற்றிப் படங்களாகக் கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இப்போது அவர் விடுதலை படத்தை இயக்கி வரும் நிலையில் அடுத்து வாடிவாசல் திரைப்படத்தை இயக்க உள்ளார். அதையடுத்து கமல், விஜய் ஆகியோருக்கு கதை சொல்லியுள்ளதாகவும் ஏற்கனவே இயக்கி முடித்த வடசென்னை  படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது தெலுங்கு நடிகர் ஜூனியர் என் டி ஆர் மற்றும் தனுஷ் ஆகியோரை இணைந்து ஒரு படத்தை இயக்க உள்ளதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது. இந்த படம் 2025 ஆம் ஆண்டு தொடங்கும் என சொல்லப்படும் எனவும் தகவல்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

இந்நிலையில் இந்த தகவல் முற்றிலும் தவறானது என வெற்றிமாறனின் மக்கள் தொடர்பாளர் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த தகவல் முற்றிலும் வதந்தி என்பது உறுதியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லெஜண்ட் படத்தில் நயன்தாரா… ஆனா ஹீரோயின் இல்ல… இயக்குனர்கள் பகிர்ந்த தகவல்!