Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனுசி படத்தின் சென்சார் சிக்கல்… நீதிமன்றத்தில் வெற்றிமாறன் வழக்கு!

vinoth
செவ்வாய், 3 ஜூன் 2025 (07:39 IST)
நயன்தாரா நடிப்பில், கோபி நயினார் இயக்கத்தில் வெளியான படம் அறம். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வர்த்தக ரீதியாகவும் நல்ல வசூலை ஈட்டியது. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றும் அடுத்த படத்துக்காக நீண்ட் இடைவெளியை எடுத்துக் கொண்டுள்ளார் இயக்குனர் கோபி.

இப்போது ஆண்ட்ரியா நடிப்பில் வெற்றிமாறன் தயாரிப்பில் ‘மனுசி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் கிட்டத்தட்ட ஒரே அறையில் நடக்கும் கதைக்களமாக உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் இப்போது இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். மனித உரிமை மீறல்கள் குறித்த கதையாக இந்த படத்தை கோபி உருவாக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் தன்னுடைய கிராஸ்ரூட் பிலிம்ஸ் சார்பாக தயாரித்துள்ளார்.

இந்த படம் சென்சாருக்கு சென்ற நிலையில் அங்குள்ள அதிகாரிகள் பல காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்க சொன்னதாக தகவல்கள் வெளியாகின. இதனால் படக்குழு படத்தை மறுசென்சாருக்கு அனுப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் தற்போது இயக்குனர் வெற்றிமாறன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. அதில் “படத்தை சென்சார் செய்ய நிபுணர் குழு ஒன்றை அமைக்கவேண்டும்” என்றும் ‘சுதந்திர வரம்புக்குட்படாதக் காட்சிகளை நீக்க சம்மதம்” என்றும் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனிருத் இசைக்காக ஒரு தடவை பார்க்கலாம்.. விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ விமர்சனம்..!

71வது தேசிய விருது அறிவிப்பு.. ஹரிஷ் கல்யாண் நடித்த படத்திற்கு சிறந்த பட விருது..!

ரஜினியின் ‘கூலி’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்த சென்சார்.. வன்முறை அதிகமா?

பாக்ஸ் ஆபிஸில் அசத்தும் 'மகாவதாரம் நரசிம்மா': ரூ.53 கோடி வசூல் சாதனை

அடுத்தடுத்த டிராப்புகள்.. தேசிய விருது வாங்கிய வெற்றிமாறனுக்கே இந்த நிலைமையா?

அடுத்த கட்டுரையில்
Show comments