மாஸ்க் படத்துக்கு இன்னும் ஜி வி க்கு சம்பளம் தரவில்லை… வெற்றிமாறன் பகிர்ந்த தகவல்!

vinoth
சனி, 15 நவம்பர் 2025 (13:51 IST)
கவின் மற்றும் ஆண்ட்ரியா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ‘மாஸ்க்’ படத்தை விகர்ணன் அசோக் இயக்கியுள்ளார். ஆண்ட்ரியாவும் அவரின் மேலாளர் எஸ் பி சொக்கலிங்கமும் இணைந்து இந்த படத்தைத் தயாரிக்கிறார்கள். வெற்றிமாறன் இந்த படத்தின் படைப்பு ஆலோசகராகவும் வழங்குபவராகவும் செயல்படுகிறார். ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படம் நவம்பர் 21 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இதையடுத்து படத்தின் டிரைலர் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் பாடல்கள் இதுவரை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. படம் ரிலீஸானதும் கவனிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

இந்நிலையில் மாஸ்க் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வெற்றிமாறன் “மாஸ்க் படம் இன்னும் ஒரு வாரத்தில் ரிலீஸாகப் போகிறது. ஆனால் ஜி வி பிரகாஷுக்கு ஒரு ரூபாய் கூட நான் இன்னும் சம்பளம் தெரியவில்லை.” எனக் கூறியுள்ளார். அது பற்றி பேசிய ஜிவி “நான் நல்ல கதைகள் என்றால் சில நேரம் பணம் வாங்கிக்கொள்ளாமல் இசையமைப்பேன். காக்கா முட்டை, விசாரணை போன்ற படங்களுக்கு நான் சம்பளமே வாங்கிக் கொள்ளவில்லை” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இயக்குநர் வி. சேகர் காலமானார்: சமூகம் பேசிய படைப்பாளியின் இறுதிப் பயணம்!

SSMB29: ராஜமவுலி - மகேஷ்பாபு பட டைட்டில் அறிவிப்பு!..

அஜித்துக்கே இந்த நிலைமையா? சம்பளத்தில் பிடிவாதம் காட்டும் ஏஜிஎஸ்

ஒரு பாட்டுதான் ரிலீஸ் ஆச்சு! அடுத்த படத்திலும் அதே ஹீரோயினை லாக் செய்த சிவகார்த்திகேயன்

சேலையில் ஜொலிக்கும் க்ரீத்தி … அழகிய புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments