வெற்றிமாறன் என்னைப் பாராட்டவே மாட்டார்… ஆனால் அந்த படம் பார்த்துவிட்டு … ஆண்ட்ரியா பகிர்ந்த தகவல்!

vinoth
வெள்ளி, 14 நவம்பர் 2025 (15:12 IST)
தமிழ் சினிமாவில் பன்முகத்திறமை கொண்ட கலைஞர்களில் ஆண்ட்ரியாவும் ஒருவர். பாடல் இசை மற்றும் நடிப்பு என 15 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் அவர் பாடிய ஊ சொல்றியா மாமா பாடல் இந்திய அளவில் ஹிட் ஆனது.

கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். தரமணி மற்றும் வடசென்னை போன்ற படங்களில் காத்திரமான நடிப்பைப் வழங்கிப் பாராட்டுகளைக் குவித்துள்ளார்.  இப்போது அவர் தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். கவினும் தானும் நடிக்கும் ‘மாஸ்க்’ படத்தைத் தயாரித்துள்ளார். இந்த படத்தில் எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் மாஸ்க் படத்தின் ப்ரமோஷனில் பேசியுள்ள ஆண்ட்ரியா “என்னுடைய சிறந்த நடிப்பை நான் பிசாசு 2 படத்தில் கொடுத்திருக்கிறேன். வெற்றிமாறன் எப்போதுமே என் நடிப்பைப் பற்றி பாராட்டி பேசமாட்டார். ஆனால் பிசாசு 2 பார்த்துவிட்டு அவர் என்னை அழைத்துப் பேசினார்” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய்யின் ‘ஜனநாயகன்’ தமிழக ரிலீஸ் உரிமையைக் கைப்பற்ற மும்முரமாக செயல்படும் தயாரிப்பாளர்!

கமல்ஹாசனின் ‘நாயகன்’ வெற்றியைத் தொடர்ந்து ‘தேவர் மகன்’ ரி ரிலீஸ்?

அஜித்- ஆதிக் படத்தில் இருந்து விலகினாரா தயாரிப்பாளர் ராகுல்?- களமிறங்குகிறதா ரிலையன்ஸ்?

அரசன் படத்தில் அனிருத்துக்கு சம்பளம் இல்லையா?... புத்திசாலித்தனமாக முடிவெடுத்த தாணு!

இயக்குனர் vs ஹீரோ… ஈகோ மோதலில் வென்றது யார்? – எப்படி இருக்கு துல்கர் சல்மானின் காந்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments