Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“அதிகாரம் திரைப்படம் கைவிடப்படவில்லை…” தயாரிப்பு தரப்பு விளக்கம்!

Webdunia
வியாழன், 24 நவம்பர் 2022 (09:06 IST)
ராகவா லாரன்ஸ் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தின் டைட்டில் ‘அதிகாரம்’ என சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் கதை வசனத்தை பிரபல இயக்குனர் வெற்றிமாறன் எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அதிகாரம் படத்தின் டைட்டில் உடன் கூடிய பஸ்ட் லூக் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகியுள்ள பெரிய அளவில் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அறிவிக்கப்பட்டதற்குப் பின்னர் இந்த படம் அடுத்த கட்டத்தை நோக்கி நகரவில்லை. இந்நிலையில் இப்போது இயக்குனர் துரை செந்தில்குமார், நயன்தாரா நடிக்கும் புதிய படத்தை இயக்க சென்றுவிட்டார்.

இதனால் அதிகாரம் திரைப்படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கதையில் லாரன்ஸுக்கு உடன்பாடு இல்லாததால், அந்த படத்தை அவர் நிராகரித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதுகுறித்து தயாரிப்பு தரப்பு அளித்துள்ள விளக்கத்தில் “திரைக்கதை அமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன. படம் கைவிடப்படவில்லை. அது சம்மந்தமான பொய்த் தகவல்கள் பரவி வருகின்றன” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments