Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

Mahendran
சனி, 11 ஜனவரி 2025 (09:40 IST)
தமிழ் திரையுலகில்  பழம்பெரும்   நடிகை கமலா காமேஷ் காலமானார். அவருக்கு வயது 72.

தமிழ் மட்டுமின்றி, மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்திருந்த கமலா காமேஷ் பல திரைப்படங்களில் குணச்சித்திர கேரக்டர்களில், குறிப்பாக அம்மா கேரக்டரில் நடித்திருந்தார்.

‘அலைகள் ஓய்வதில்லை’ என்ற படத்தில் அறிமுகமான கமலா காமேஷ் முதல் படத்திலேயே ஹீரோவுக்கு அம்மாவாக நடித்திருந்தார் என்பதும், அதன் பின்னர் கடலோர கவிதைகள் உள்பட பல படங்களில் நடித்திருந்தார். விசுவின் சம்சாரம், அது மின்சாரம் என்ற படத்தில் கோதாவரி என்ற கேரக்டரில் நடித்திருந்த கமலா காமேஷ் கேரக்டர், இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் நினைவில் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

1974 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் காமேஷ் என்பவரை கமலா காமேஷ் திருமணம் செய்து கொண்டார். நடிகை உமா ரியாஸ் இவரது மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த கமலா காமேஷ் இன்று சென்னையில் காலமானார். அவருடைய மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

புஷ்பாவால் தள்ளிப்போன இண்டெஸ்டெல்லார் மீண்டும் ரீரிலீஸ்! - நோலன் ரசிகர்கள் ஹேப்பி!

அஜித்குமாரின் கார் ரேஸை இலவசமாக லைவில் பார்ப்பது எப்படி?

எனக்கு யாரும் ரூல்ஸ் போட முடியாது.. எனக்கு புடிச்சத செய்வேன்! - கார் ரேஸ் குறித்து அஜித்குமார் பேட்டி வைரல்!

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments