சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வந்த ரெட்ரோ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. தற்போது விறுவிறுப்பாக தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், சூர்யா தனது சமூக வலைதளத்தில் இந்த படத்தின் ரிலீஸ் செய்தியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
சூர்யா ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள ரெட்ரோ திரைப்படத்தின் டைட்டில் டீசர் கடந்த கிறிஸ்மஸ் தினத்தில் வெளியானது. சூர்யாவின் 44வது படமான இதனை, சூர்யாவின் 2D Entertainment மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.
சூர்யா இரட்டை வேடங்களில் நடித்திருப்பதாக கூறப்பட்டுள்ள இந்த படத்தில், கருணாகரன், ஜெயராம் உள்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரொமான்ஸ் கலந்த ஆக்சன் படமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் மே 1ஆம் தேதி, தொழிலாளர் தினத்தன்று வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புடன், சூர்யா வெளியிட்டுள்ள போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.