பிரபல பழம்பெரும் இந்தி நடிகை வத்சலா தேஸ்முக் இன்று காலமானார்.
பழம்பெரும் மராத்தி- இந்தி நடிகை வத்சலா தேஸ்முக் (92) மகராஷ்டிராவில் உள்ள மும்பையில் வசித்து வந்தார். வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
சில தினங்களுக்கு முன் அவரது உடல் நிலை மோசமானது.எனவே மேல்சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலுக்கு சினிமாத்துறையினர் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இன்று அவரது பூதவுடல் மும்பை சிவாஜி பூங்காவில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.