Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மிரட்டலான லுக்கில் சிம்பு… வெந்து தணிந்தது காடு படத்தின் புது போஸ்டர்!

மிரட்டலான லுக்கில் சிம்பு… வெந்து தணிந்தது காடு படத்தின் புது போஸ்டர்!
, செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (08:59 IST)
கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் திரைப்படமான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் மேலும் பயங்கரமான எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் சிம்பு – கௌதம் – ஏ ஆர் ரஹ்மான் ஆகிய வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். சிம்புவின் மாநாடு படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் மீதான வியாபார எல்லை அதிகமாகியுள்ளது.

படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 15 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட உள்ளது. இந்த படத்தின் டப்பிங் பணிகள் நடந்துவரும் நிலையில் தன் சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கான டப்பிங்கை சமீபத்தில் பேசி முடித்தார் சிம்பு. இது சம்மந்தமான புகைப்படத்தை அவர் இணையத்தில் பகிர்ந்திருந்தார்.
செப்டம்பர் 2 ஆம் தேதி படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியாக உள்ளது. இந்நிலையில் தற்போது படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. கையில் துப்பாக்கியோடு சிம்பு இருக்கும் அந்த போஸ்டர் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லைகா சுபாஷ்கரனோடு அஜித்… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!