Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இத்தனை வருடமாக உங்களை எப்படி வச்சு செஞ்சதுன்னு புரியுது – வெங்கட் பிரபுவின் டிவீட்!

Webdunia
செவ்வாய், 20 அக்டோபர் 2020 (16:57 IST)
இயக்குனர் வெங்கட் பிரபு நேற்றைய சிஎஸ்கே அணியின் தோல்விகுப் பின்னர் சிஎஸ்கே பற்றி டிவிட் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியுடன் மோதிய சிஎஸ்கே அணி பெரும் தோல்வியை தழுவியுள்ளது பலருக்கு அதிர்ச்சியை அளித்தது. இதுவரையிலான 10 போட்டிகளில் 3 போட்டிகளில் மட்டுமே வென்ற சிஎஸ்கே அணி தரவரிசையில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் ஜோஸ் பட்லர் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

இந்நிலையில் இந்த தோல்வியின் மூலம் சிஎஸ்கேவின் பிளே ஆப் கனவு கிட்டத்தட்ட நொறுங்கியுள்ளது. சென்னை அணியின் தோல்வியை பலரும் சமூகவலைதளத்தில் கொண்டாட கடுப்பான இயக்குனர் வெங்கட் பிரபு சென்னை அணிக்கு ஆதரவாக டிவீட் செய்துள்ளார். அதில் ‘இத்தனை ஆண்டுகளாக சென்னை அணி உங்களை எல்லாம் எப்படி வச்சு செய்துள்ளது என்பது புரிகிறது ஹேட்டர்களே’ எனவும் ‘உண்மையாக ரெய்னாவை நான் மிஸ் செய்கிறேன். இத்தனை ஆண்டுகளில் சென்னை அணி இவ்வளவு மோசமாக விளையாடியதில்லை’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகை அதுல்யா ரவியின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

‘வாழை’ படப் புகழ் திவ்யா துரைசாமியின் க்யூட் க்ளிக்ஸ்!

இந்த ஆண்டின் மெகா பிளாக்பஸ்டர் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

தொடர்ந்து செய்த தவறு… இம்பேக்ட் பிளேயருக்கும் சேர்த்து அபராதம்!

'தக்லைஃப்’ பேனரை கிழித்து ஆர்ப்பாட்டம்.. கன்னட அமைப்புகளால் படத்திற்கு தடையா?

அடுத்த கட்டுரையில்
Show comments