இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கும் படத்தின் ஷூட்டிங் கடந்த வாரம் தொடங்கி நடந்து வருகிறது.
நாக சைதன்யா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் புதிய படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ளார். இந்த படத்தை சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் மற்றும் நாக சைதன்யா ஆகியோரோடு வெங்கட்பிரபு இருக்கும் புகைப்படம் வெளியாகி கவனம் பெற்றது.
இந்த படத்தில் வில்லனாக அருண் விஜய் நடிக்க உள்ளார் என்று சொலல்ப்பட்டது. ஆனால் இப்போது அவர் அந்த படத்தில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அவர் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் அரவிந்த் சுவாமி நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் 23 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.