Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆகஸ்ட் மாதத்தில் GOAT படத்தை ரிலீஸ் பண்ணுவதில் இப்படி ஒரு சிக்கல் இருக்கா?

vinoth
புதன், 28 பிப்ரவரி 2024 (08:04 IST)
விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் The Greatest Of All Time என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் பலகட்டமாக நடந்து வரும் நிலையில் தற்போது சென்னை தாம்பரத்தில் நடந்து வருகிறது. இறுதிகட்ட ஷூட்டிங் ரஷ்யாவின் மாஸ்கோவில் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடந்து வருவதால் இந்த படம் ஆகஸ்ட் மாதம் ரிலீஸாக வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் வெளியானது.

ஆனால் ஆகஸ்ட்டில் இந்த படம் ரிலீஸானால் வெளிநாடுகளில் ரிலீஸ் செய்வதில் ஒரு சிக்கல் உள்ளதாம். ஐரோப்பிய நாடுகளில் அந்த நேரம் விடுமுறை காரணமாக அங்கு வாழும் தமிழர்கள் சொந்த ஊருக்கு திரும்பிவிடுவார்களாம். அதனால் அந்த நேரத்தில் படத்தை ரிலீஸ் செய்தால் பெரியளவில் ரசிகர்கள் கூட்டம் தியேட்டருக்குள் வராது என சொல்லப்படுகிறது. இதனால் GOAT திரைப்படம் தீபாவளிக்கு தள்ளி போக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிடப்பில் போடப்பட்டதா ராகவா லாரன்ஸின் ‘ஹண்டர்’ திரைப்படம்!

இயக்குனர் பிரபு சாலமனின் கும்கி 2 ஷூட்டிங் நிறைவு!

பிரபுதேவா நடிக்கும் ‘சிங்காநல்லூர் சிக்னல்’ படத்தின் முதல் லுக் போஸ்டர்!

பஹத் பாசிலோடு இணைந்து நடிக்கும் மாரீசன் படம் பற்றி வடிவேலு தந்த அப்டேட்!

நேரடியாக ஹாலிவுட் படத்தில் நடிகையாக அறிமுகம் ஆகும் சத்யராஜின் மகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments