ரஜினி உண்மையில் எனக்கு உதவினாரா? வேலுபிரபாகரன் பதில்
, வெள்ளி, 24 ஜனவரி 2020 (21:09 IST)
ரஜினி, பெரியார் பிரச்சினை தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று ராகவா லாரன்ஸ் வெளியிட்ட ஒரு அறிக்கையில் பெரியாரின் கொள்கைகளை கொண்ட ஒரு திரைப்படத்தை வேலுபிரபாகரன் இயக்கியபோது அந்த திரைப் படத்தை ரிலீஸ் செய்ய ரஜினிதான் பண உதவி செய்தார் என்று கூறியிருந்தார்
இது குறித்து கருத்து கூறிய இயக்குனர் வேலுபிரபாகரன் ’நான் பெரியாரின் கொள்கையை வைத்து ஒரு படம் எடுத்தபோது ரஜினி ஒரு நாள் என்னை வீட்டுக்கு அழைத்தார். நான் சென்று அவரை பார்த்தபோது நீங்கள் இயக்கிக் கொண்டிருக்கும் திரைப்படத்தில் என்ன பிரச்சனை என்று கேட்டார். நான் பிரச்சினையை கூறினேன். அப்போது அவர் உடனே 5 லட்ச ரூபாயை எடுத்துக் கொடுத்து படத்தை ரிலீஸ் செய்ய வேண்டிய வேலையை பாருங்கள்’ என்றார்.
இது நடந்தது 2007 ஆம் ஆண்டு. அந்த காலகட்டத்தில் 5 லட்ச ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை. நான் பெரியாரின் கொள்கையை வைத்து படமெடுத்துக் கொண்டிருந்த போது அதே பெரியார் கொள்கையை கடைபிடித்த யாரும் எனக்கு உதவி செய்யவில்லை. ஆனால் அதே நேரத்தில் ஆன்மீக கொள்கை கொண்ட ரஜினி எனக்கு உதவினார். எனவே அவர் பெரியார் குறித்து தவறாக சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை என்று கூறினார். வேலு பிரபாகரனின் இந்த கருத்திலிருந்து ராகவா லாரன்ஸ் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது உண்மை என்பது புரிய வந்துள்ளது
அடுத்த கட்டுரையில்