ஓடிடியில் ரிலீஸாகும் வெள்ளை யானை திரைப்படம்… படக்குழுவினர் எடுத்த நல்ல முடிவு!

Webdunia
வெள்ளி, 4 ஜூன் 2021 (16:38 IST)
சமுத்திரக்கனி நடிப்பில் சுப்ரமண்யம் சிவா இயக்கியுள்ள வெள்ளை யானை திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸாக உள்ளதாம்.

இயக்குனர் சுப்ரமண்யம் சிவா இயக்கத்தில் சமுத்திரக்கனி மற்றும் யோகி பாபு ஆகியோர் இயக்கத்தில் தொடங்கப்பட்ட திரைப்படம் வெள்ளை யானை. முதலில் இந்த படத்தை தனுஷ்தான் தயாரித்து வந்தார். ஆனால் அதன் பிறகு இப்போது அவரின் மேலாளர் வினோத் தயாரிப்பதாக சொல்லப்படுகிறது. நீண்ட நாட்களாக உருவாக்கத்தில் இருந்த இந்த திரைப்படத்தின் டிரைலர் நேற்று இணையத்தில் வெளியாகியுள்ளது. விவசாயிகளின் அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள மற்றொரு படமாக இது இருக்கும் என்பது அதன் காட்சிகளில் தெரிகிறது.

நீண்ட ஆண்டுகளாக ரிலீஸாகாமல் இருந்த இந்த திரைப்படம் இப்போது சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்திலும் பின்னர் சன் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகும் என சொல்லப்படுகிறது. திரையரங்குகளில்தான் படத்தை ரிலீஸ் செய்யவேண்டும் என இயக்குனர் காத்திருந்த நிலையில் தற்போதுள்ள சூழலில் அது சாத்தியம் இல்லை என்பதால் இந்த முடிவை படக்குழு எடுத்ததாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறுவது இந்த பெண் போட்டியாளரா? ரசிகர்கள் ஆச்சரியம்..!

அப்பாவ விட தெளிவா இருப்பாரு போலயே! ஜேசன் சஞ்சயை அசைக்க முடியாமல் திணறும் திரையுலகம்

காஜாமுகைதீன் தற்கொலை முயற்சி.. அஜித் காரணம் இல்ல.. உண்மையில் நடந்தது இதுதான்

அஜித்துக்கு 'ஜென்டில்மேன் ஓட்டுநர் ஆஃப் தி இயர் 2025' விருது.. இத்தாலி செய்த கெளரவம்..

ஒரு லட்சம் பேரா? மலேசியாவில் நடப்பது ஆடியோ லாஞ்ச் இல்ல.. விஜய்க்கு இதுதான் சரியான ஃபேர்வல்

அடுத்த கட்டுரையில்
Show comments