வேலைக்காரன் இசை வெளியீட்டு தேதி இன்று அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 24 நவம்பர் 2017 (06:29 IST)
சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன் ராஜா இயக்கிய 'வேலைக்காரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளும் நிறைவடையும் நிலையில் உள்ளது.





இந்த நிலையில் இந்த படம் வரும் டிசம்பர் 22ஆம் தேதி கிறிஸ்துமஸ் விருந்தாக வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீடு எப்போது என்பது குறித்த அறிவிப்பு இன்று மாலை 7 மணிக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

அனிருத்தின் இசையில் உருவான 'இறைவா' என்ற பாடல் ஏற்கனவே சுப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் மற்ற பாடல்களையும் கேட்க சிவகார்த்திகேயன், அனிருத் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

சிவகார்த்திகேயன், பகத்பாசில், நயன்தாரா, சினேகா, பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா, விஜய் வசந்த், ஆர்ஜே பாலாஜி, சதீஷ், ரோபோ சங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். ராம்ஜி ஒளிப்பதிவில் விவேக் ஹர்சன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்புவின் 'அரசன்' படத்தில் விஜய் சேதுபதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அப்படியே ‘செல்லமே’ விஷால் ரேஞ்சுக்கு வந்துட்டாரே? இதுதான்டா கம்பேக்

ரஜினி கமல் இல்லைனா வேற படமே இல்லையா? சுந்தர் சி விலகியது குறித்து ரமேஷ் கண்ணா விளக்கம்

ஹிப்ஹாப் ஆதி கான்செர்ட் மூலம் 160 கோடி ரூபாய் வருவாயா?... ஆச்சர்யத் தகவல்!

ரஜினி படத்தில் இருந்து சுந்தர் சி வெளியேற இதுதான் காரணமா?.. மூத்த இயக்குனர இப்படி நடத்தலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments