96 படத்தின் கிளைமேக்ஸில் விஜய் சேதுபதிக்கு திருமணம் ஆகும் என எதிர்பார்த்தோம் என ரசிகர்கள் நடிகை வர்ஷா பொல்லம்மாவிடம் கேள்வி கேட்டுள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான 96 திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த படத்தில் நடிகை வர்ஷா பொல்லம்மா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதில் ஒரு தலையாக அவர் விஜய் சேதுபதியை காதலிப்பது போல அமைக்கப்பட்டு இருந்தது.
இது சம்மந்தமாக இன்ஸ்டாகிராமில் நடந்த உரையாடலில் ரசிகர் ஒருவர் 96 படக் கிளைமேக்ஸில் நீங்கள் விஜய் சேதுபதியை திருமணம் செய்துகொள்வீர்கள் என நினைத்தோம் எனக் கூற அவருக்கு பதிலளித்த வர்ஷா ஹா ஹா பலரும் இதையேதான் பலரும் என்னிடம் கேட்டனர் எனக் கூறியுள்ளார்.