Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிக்கலில் பாலா படம் … -காதலர் தினப் போட்டியில் இருந்து ஒதுங்கிய வர்மா

Webdunia
செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (14:01 IST)
பாலா இயக்கத்தில் விக்ரம்மின் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள படமான வர்மா காதலர் தினத்தன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டட் நிலையில் மார்ச் மாதத்திற்குத் தள்ளிப் போகியுள்ளது
 

கடந்த ஆண்டில் தெலுங்கு சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப்படமான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் தமிழ் மற்றும் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதில் இந்தியில் விஜய் தேவரகொண்டாவின் கதாப்பத்திரத்தில் ஷாகித் கபூர் நடிக்க, தமிழ் ரீமேக்கான வர்மா படத்தின் மூலம் விக்ரம்மின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை தமிழ் சினிமாவின் அடையாளமாகக் கருதப்படும் இயக்குனர்களில் ஒருவரான பாலா இயக்குகிறார். தன் நண்பர் விக்ரம்முக்காக முதல் முறையாக ரீமேக் படமொன்றை அவர் இயக்கியுள்ளார். காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் காதலர் தினத்தன்று வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டது.

ஆனால் காதலர் தினத்தன்று தேவ், 100 % காதல் ஆகிய இருப் படங்கள் ரிலிஸாவதால் போதுமான தியேட்டர்கள் கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது. மேலும் வர்மா திரைப்படம் விலங்குகள் நல வாரியத்தில் இருந்து இன்னும் தடையில்லாச் சான்றிதழ் பெறாத காரணத்தினாலும் காதலர் தினப் போட்டியில் இருந்து விலகி இப்போது மார்ச் மாதத்திற்குத் தள்ளிப் போயுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments