பாலா இயக்கிய 'வர்மா' படத்தை கிடப்பில் போட்ட தயாரிப்பு நிறுவனம்

Webdunia
வியாழன், 7 பிப்ரவரி 2019 (17:35 IST)
சீயான் மகன் துருவ் நடிப்பில் பாலா இயக்கத்தில் பாலாவின் பி ஸ்டுடியோ நிறுவனம் ஃபர்ஸ்ட் காப்பி ஒப்பந்த அடிப்படையில் E4 எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனத்திற்கு 'வர்மா' என்ற படத்தை உருவாகி கொடுத்தது.

இந்த படம் வரும் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அதன் பின் எந்தவித அறிவிப்பும் வெளிவரவில்லை

இந்த நிலையில்  E4 எண்டர்டெயின்மெண்ட் சற்றுமுன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்த படம் அதன் ஒரிஜினல் படமான 'அர்ஜூன் ரெட்டி' படத்தில் இருந்து வேறுபட்டிருப்பதாலும், சில காட்சிகள் திருப்தி இல்லாததாலும் இந்த படத்தை ரிலீஸ் செய்யும் முடிவை கைவிடுகிறோம்.

இந்த படத்திற்கு பதிலாக புதியதாக முற்றிலும் புதிய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவாக்கி வரும் ஜூலையில் வெளியிடவுள்ளோம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் தேசிய விருது பெற்ற ஒரு இயக்குனர் இயக்கிய படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் மறுத்துள்ளது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘அஞ்சான்’ ரீரிலீஸ்.. சூர்யா என்ன சொன்னார்? மேடையில் கடுப்பான லிங்குசாமி

சினிமாவில் இருந்து விலகுகிறேன்: ’சென்னை 28' நடிகை அறிவிப்பு.. என்ன காரணம்?

ரிவால்வர் ரீட்டாவாகவே மாறிய கீர்த்தி சுரேஷ்… விண்டேஜ் ட்ரஸ்ஸில் கூல் க்ளிக்ஸ்!

இசைக் கச்சேரியில் ஜொலிக்கும் உடையில் கலக்கும் ஆண்ட்ரியா… அசத்தல் க்ளிக்ஸ்!

வழக்கமாக சூப்பர் ஸ்டார்களின் படங்களில் ஹீரோயின்களுக்கு வேலை இருக்காது, ஆனால் … மாளவிகா மோகனன் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments