Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

துணிவு வைப் அடங்கட்டும்.. வாரிசு ட்ரெய்லர் தாமதம்! – எப்போ ரிலீஸ்!

துணிவு வைப் அடங்கட்டும்.. வாரிசு ட்ரெய்லர் தாமதம்! – எப்போ ரிலீஸ்!
, ஞாயிறு, 1 ஜனவரி 2023 (09:05 IST)
புத்தாண்டை முன்னிட்டு நேற்று துணிவு ட்ரெய்லர் வெளியான நிலையில் வாரிசு ட்ரெய்லர் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகர்களை கொண்ட நடிகர்கள் அஜித் மற்றும் விஜய். எச்.வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் அஜித்குமார் நடித்துள்ளார். வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் விஜய் நடித்துள்ளார். இரண்டு படங்களும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ல் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு ஹீரோ படங்களும் ஒரே நாளில் வெளியாக உள்ள நிலையில் புத்தாண்டை முன்னிட்டு நேற்று இரவு 7 மணிக்கு துணிவு படத்தின் ட்ரெய்லர் வெளியானது. வங்கி கொள்ளையை மையப்படுத்திய அந்த படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே வைரலாகியுள்ள நிலையில், வாரிசு படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகும் என விஜய் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால் வாரிசு படத்தின் ட்ரெய்லர் ஜனவரி 2ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ட்ரெய்லர் அறிவிப்பு மற்றும் புதிய போஸ்டர் புத்தாண்டான இன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edit By Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துனிஷா சர்மா தற்கொலை வழக்கு: காதலருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்