போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார். தொடர்ந்து தாரை தப்பட்டை, மாரி 2 , சர்க்கார், விக்ரம் வேதா, சண்டக்கோழி 2 , போன்ற படங்களில் வித்யாசமான கதாபாத்திரங்கள் ஏற்று நடித்திருந்தார்.
நடிப்பது மட்டும் தன் கடமை என்று நிறுத்தி விடாமல் தொடர்ந்து சமூகத்திற்கு எதிராக நடக்கும் அவலங்களை தட்டி கேட்பது, பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை எதிர்த்து சக்தி என்ற பெண்களுக்கு பாதுகாப்பான அமைப்பையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இன்று தனது 37வது பிறந்தநாள் கொண்டாடும் வரலட்சுமிக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். நண்பர்கள் ஒன்று கூடி அவரது பிறந்தநாளில் சர்ப்ரைஸ் கொடுத்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.