மீண்டும் பிக்பாஸ் வீட்டில் வனிதா! சூடு பறக்குமா?

திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (09:15 IST)
பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று சர்ச்சைக்குரிய சாக்சி வெளியேற்றப்பட்ட நிலையில் கஸ்தூரிதான் இனி நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கஸ்தூரி பிக்பாஸ் வீட்டிற்கு வந்து மூன்று நாட்கள் ஆகியும் எந்தவித பாதிப்பும் இல்லை என்பதால் பார்வையாளர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது
 
இந்த நிலையில் இன்று அதிரடியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைகிறார் வனிதா. பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு இன்று ஓட்டல் டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கும்போல் தெரிகிறது. அந்த ஓட்டலுக்கு வனிதா சிறப்பு விருந்தாளியாக வருவது போல் இன்றைய முதல் புரமோ வீடியோ காட்சிகள் உள்ளன. எனவே அதிகபட்சமாக இன்று ஒருநாள் மட்டுமே வனிதா பிக்பாஸ் வீட்டில் தங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது
 
வனிதாவிடம் ஏற்கனவே மோதிய மதுமிதா மற்றும் அபிராமி இன்னும் பிக்பாஸ் வீட்டில் இருப்பதால் அவர்கள் இருவருக்கும் வனிதா சிக்கலை கொடுப்பாரா? அல்லது புதியதாக வந்திருக்கும் கஸ்தூரியை ஒரு காட்டு காட்டுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் கட்டணத்தை திரும்ப பெற்ற 'நேர் கொண்ட பார்வை' படம் பார்த்த ரசிகர்கள்!