Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கவின் நீங்க நெனைக்குற மாதிரி இல்ல, ஆனால் அபிராமி தான்..! வனிதா அளித்த முதல் பேட்டி

Advertiesment
கவின் நீங்க நெனைக்குற மாதிரி இல்ல, ஆனால் அபிராமி தான்..! வனிதா அளித்த முதல் பேட்டி
, புதன், 17 ஜூலை 2019 (14:51 IST)
பிக்பாஸ் சீசன் 3 விறுவிறுப்பாக சென்றதற்கு ஒரே காரணம் வனிதா தான். அந்த வீட்டுக்குள் அனைவரிடமும் வம்பிழுத்து வந்த வனிதாவால் பார்வையாளர்கள் குவிந்தனர். இதனால் நிகழ்ச்சிக்கான டி.ஆர்.பி-யும் அதிகரித்தது. 


 
இதற்கிடையில் கடந்த வாரம் எலிமினேஷனுக்காக பரிந்துரைக்கப்பட்ட வனிதா, யாரும் எதிர்பாராத விதத்தில் நேற்று எலிமினேட் செய்யப்பட்டார். இது நிகழ்ச்சி போட்டியாளர்களுக்கு மட்டுமில்லாமல், பார்வையாளர்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. 
 
இந்நிலையில் தற்போது நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த வனிதா முதன் முறையாக பிரபல இணையதள சேனல் ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார். அந்த பேட்டியில் பிக்பாஸிற்குள் நடக்கும் பல்வேறு விஷயங்களை சொல்லிய வனிதாவிடன் கவின் பற்றி கேள்வி எழுப்பினர். 
 
அதற்கு பதிலளித்த வனிதா, கவின் பெண்களுடன் எப்போதும் போலவே தான் பழகுகிறான். அவனுக்கு அத்தை  பெண்கள்  அதிகம் அவர்களுடன் எப்படி அரட்டை அடிப்பானோ அப்படிதான் நடந்துகொள்கிறான். ஆனால் அபிராமி தான் மோசம், பிக்பாஸில் வந்த 2 நாளில் கைவினை காதலிக்கிறேன்னு சொன்னா அப்றோம் அவன் வேண்டாம்னு சொன்னதும் உடனே முகனை காதலிக்கிறா...முகனுக்கு ஏற்கனவே வெளியில் ஒரு காதல் இருக்கு....நான் அதை தான் முகனிடம் கேட்டேன்.

webdunia


இதை உன்  கேர்ள் ப்ரண்ட் பார்த்த கஷ்டப்படமாட்டாளான்னு அதற்கு முகன், அவளுக்கு தெரியும் நான் நடிக்குறேன்னு. நான் வரும்போது சொல்லிவிட்டு தான் வந்தேன் இப்படியெல்லாம் நான் பண்ணுவேன் நீ பெரிதா எடுத்துக்காத இது வெறும் நடிப்பு தான்" என முகன் கூறியதாக வனிதா தெரிவித்துள்ளார். எனவே வீட்டிற்குள் நடக்கும் காதலெல்லாம் இல்லை,  வெறும் பொய் என சூசகமாக கூறினார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல்ஹாசனை அடுத்து சூர்யாவுக்கு ஆதரவு கொடுத்த ரஜினி பட இயக்குனர்!