முகினிடம் அடி வாங்கினாரா வனிதா? பரபரப்பு தகவல்

புதன், 14 ஆகஸ்ட் 2019 (20:12 IST)
பிக்பாஸ் வீட்டின் சிறப்பு விருந்தினராக வந்த வனிதா, முதலில் அபிராமியை பிரெய்ன்வாஷ் செய்து முகினுடன் மோத வைத்தார். அவர்களுடைய உறவு சுக்குநூறாக நொறுங்கிவிட்ட நிலையில் அடுத்ததாக கவினை குறி வைத்த வனிதா, அதற்காக மதுமிதாவை தூண்டிவிட்டார். தற்போது பிக்பாஸ் வீடே கிட்டத்தட்ட ஆண் போட்டியாளர், பெண் போட்டியாளர் என இரண்டு குரூப்பாக பிரிந்துவிட்டது.
 
இந்த நிலையில் அபிராமி மீது  தான் வைத்திருந்த கள்ளங்கபடம் இல்லாத நட்பை வனிதா கொச்சைப்படுத்திவிட்டதாகவும், அபிராமியின் மனதை வனிதா கலைத்து முகினை தவறான நபராக நினைக்க வைத்துவிட்டதாகவும் அவர் மீது ஆத்திரம் கொண்டார். இந்த ஆத்திரத்தை அவர் அடக்கி வைத்திருந்தாலும், இன்று அது வெளியேறிவிட்டதாகவும் இதனால் வனிதாவை முகின் அடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது
 
பிக்பாஸ் நிகழ்ச்சியை கூர்ந்து கவனித்து விமர்சனம் செய்து வரும் ஒருசில டுவிட்டர் பயனாளிகள் இந்த தகவலை உறுதி செய்துள்ளனர். முகினிடம் வனிதா அடிவாங்கிய காட்சி நாளை ஒளிபரப்பாகும் என்றும் டுவிட்டரில் செய்தி ஒன்று பரவி வருகிறது. இது செய்தியா? அல்லது வதந்தியா? என்பதை நாளை வரை பொறுத்திருந்து பார்ப்போம்

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் "இங்க எவனும் மனுஷன மனுஷனா பாக்குல" ஜிவி பிரகாஷின் "ஐங்கரன்" டிரெய்லர்!