Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலை உச்சியில் பிறந்தநாள் கொண்டாடிய வாணி போஜன்!

Webdunia
வியாழன், 29 அக்டோபர் 2020 (17:24 IST)
சின்னத்திரை நயன்தாரா என்று சீரியல் ரசிகர்களால் அழைக்கப்பட்டு பெரும் பிரபலமடைந்தவர் நடிகை வாணி போஜன். ஆரம்பத்தில் விமான பணிப் பெண்ணாக இருந்து பின்னர் மாடலிங் திரையில் நுழைந்தார். அதன் மூலம் கிடைத்த வாய்ப்பில் தான் சீரியல் நடிகையானார்.

சன் டிவியில் ஒளிபரப்பான " தெய்வமகள் " சீரியலில் நடித்து குறுகிய காலத்தில் குடும்ப ரசிகர்களிடையே படு பேமஸ் ஆகிவிட்டார். அதைத்தொடர்ந்து வெள்ளித்திரையில் நுழைய அம்மணிக்கு வாய்ப்பு கிடைத்தது. அசோக் செல்வன் நடித்த ‘ஓ மை கடவுளே’ படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் மனதில் மீரா அக்காவாக நுழைந்துவிட்டார்.

அதையடுத்து தனது இரண்டாவது படத்தில் பிரபல நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாகிறார். ஆம், பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பாக கார்த்திக் தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகிறது. இந்நிலையில் நேற்று தனது 32வது பிறந்தநாளை மலை உச்சியில் அமர்ந்து கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

“எல்லா அப்பாக்களும் பொய்யர்கள்தான்…” –இயக்குனர் ராமின் ‘பறந்து போ’ பட டீசர் அப்டேட்!

ராஜமௌலிக்கு ‘No’ சொன்ன விக்ரம்… மலையாள நடிகரை டிக் அடித்த படக்குழு!

கமல் மன்னிப்பு கேட்டாலும் ‘தக்லைஃப் படத்தை வெளியிட விடமாட்டோம்: கர்நாடக திரைப்பட சம்மேளனம்

தயாரிப்பாளராக கால்பதிக்கும் ரவி மோகன்… எஸ் ஜே சூர்யாவோடு முதல்முறையாகக் கூட்டணி!

இரண்டு வருட இடைவெளிக்குப் பின் வெளியாகும் அனுஷ்காவின் ‘காத்தி’ திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments