Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போஸ்டர் கூட ரிலீஸ் ஆகவில்லை… ஆனா 200 கோடி வியாபாரம் – வலிமை படைத்த சாதனை!

போஸ்டர் கூட ரிலீஸ் ஆகவில்லை… ஆனா 200 கோடி வியாபாரம் – வலிமை படைத்த சாதனை!
, திங்கள், 5 ஜூலை 2021 (15:57 IST)
வலிமை படத்தின் ரிலிஸூக்கு முன்னரே 200 கோடிக்கு மேல் அதன் வியாபாரம் நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

நேர்கொண்ட பார்வை வெற்றிக்குப் பின்னர் அஜித் இப்போது வலிமை படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த படத்துக்கு அஜித்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கோரோனா லாக்டவுனால் தடைபட்டு மீண்டும் தொடங்கி 90 சதவீதம் வரை முடிந்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக மீதமுள்ள படப்பிடிப்பை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஆனாலும் ரசிகர்களுக்காக இதுவரை ஒரு போஸ்டர் கூட வெளியிடாமல் இழுத்தடித்து வருகிறது படக்குழு. இது சம்மந்தமாக முன்னதாக போனி கபூரை கேலி செய்யும் விதமாக சில இடங்களில் போஸ்டர்கள் ஒட்டுவதும், அரசியல் மேடைகள் மற்றும் கிரிக்கெட் மைதானங்களில் வலிமை அப்டேட் கேட்பது என அஜித் ரசிகர்கள் ஆர்வக்கோளாறில் சுற்றி வந்தனர். இதையடுத்து மே 1 அன்று அஜித் பிறந்தநாளில் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில் ஜூலை மாதத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்ய வலிமை படக்குழு ஆலோசித்து வருகிறதாம். இதையடுத்து ஜூலை 15 ஆம் தேதி வியாழக் கிழமை ரிலீஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அதே போல ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவற்றை ஒரே நாளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது வலிமை படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. சில சினிமா சம்மந்தப்பட்ட இணைய ஊடகங்கள் வெளியிட்ட தகவலின் படி சுமார் 215 கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப்போவது அவரது மகளா?