Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வலிமை படப்பிடிப்பு ‘நோ’ சொன்ன் டெல்லி அரசு – பின்னணி என்ன?

வலிமை படப்பிடிப்பு ‘நோ’ சொன்ன் டெல்லி அரசு – பின்னணி என்ன?
, செவ்வாய், 20 அக்டோபர் 2020 (10:58 IST)
வலிமை படத்தின் சில காட்சிகளை டெல்லியில் எடுக்கலாம் என படக்குழுவினர் முயற்சி செய்த நிலையில் அதற்கு டெல்லி அரசு தடை விதித்துள்ளது.

நேர்கொண்ட பார்வை வெற்றிக்குப் பின்னர் அஜித் இப்போது வலிமை படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த படத்துக்கு அஜித்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கோரோனா லாக்டவுனால் தடைபட்டுள்ளது. இதனால் வலிமை படத்தைப் பற்றிய அப்டேட்டுகளுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் கொரோனா லாக்டவுனுக்கு பின்னர் சில காட்சிகள் சென்னையில் படம் பிடிக்கப்பட்ட நிலையில் இப்போது அடுத்த கட்ட படப்பிடிப்பை டெல்லியில் நடத்தலாம் என படக்குழு முடிவு செய்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்ட போது சம்மந்தப்பட்ட இடத்தில் அனுமதி வழங்க மறுத்துள்ளது டெல்லி அரசு. இதனால் அடுத்து என்ன செய்வது என படக்குழு யோசனையில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிம்பு சுசீந்தரன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது? வெளியான ரகசியம்!