Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வலிமை ஓடிடி ரிலீஸ்.. வெளியான 48 மணிநேரத்தில் படைத்த சாதனை!

Advertiesment
வலிமை ஓடிடி ரிலீஸ்.. வெளியான 48 மணிநேரத்தில் படைத்த சாதனை!
, திங்கள், 28 மார்ச் 2022 (11:45 IST)
அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் மார்ச் 25 ஆம் தேதி முதல் ஓடிடியில் வெளியானது.

 ‘வலிமை’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஒரு மாதம் கழித்து ஜி 5 ஓடிடி தளத்தில் மார்ச் 25 ஆம் தேதி வெளியானது. ஏற்கனவே 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக அதிகாரபூர்வமற்ற செய்திகள் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதை உறுதிப்படுத்தி டிவீட் செய்துள்ளார்.

இந்நிலையில் வலிமை ஓடிடி ரிலீஸுக்காக சென்னையின் முக்கியப் பகுதியான YMCA மைதானத்தில் 10000 அடியில் பிரம்மாண்ட கட் அவுட்டை ஜி நிறுவனம் வைத்தது பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து இப்போது ஓடிடியில் 4கே தரப்பில் டால்பி ஒலி வடிவமைப்பில் வலிமை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வலிமை படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளும் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் வலிமை திரைப்படம் வெளியாகி 48 மணிநேரத்தில் சுமார் 200 மில்லியன் நிமிடங்கள் ஸ்ட்ரீம் ஆகி சாதனைப் படைத்துள்ளதாக ஜி 5 சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று வெளியாகிறது பா ரஞ்சித்தின் அடுத்த பட அப்டேட் !