Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் ரிலீஸாகும் இரண்டு வலிமை பாடல்கள்… அஜித் ரசிகர்களுக்கு வந்த இனிப்பு செய்தி!

Webdunia
திங்கள், 19 ஜூலை 2021 (11:36 IST)
வலிமை படத்தின் இரண்டு பாடல்கள் விரைவில் ரிலீஸாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்து வரும் படம் வலிமை. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக படத்திற்கான அப்டேட் கேட்டு ரசிகர்கள் காத்திருந்த சூழலில் சமீபத்தில் வலிமை ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது. இந்த படத்தில் இன்னும் 10 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே மீதமுள்ளது. இதை முடித்து மற்ற பணிகளை முடித்து விட்டு ஆயுதப் பூஜை பண்டிகைக்கு வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. வலிமை திரைப்படத்தின் இந்தி டப்பிங் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. தமிழில் வெளியாகும் அன்றே இந்தியிலும் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கூடிய விரைவில் வலிமை படத்தில் இடம்பெற்றுள்ள அஜித்தின் அறிமுகப்பாடல் மற்றும் ஒரு தாய் செண்ட்டிமெண்ட் பாடல் ஆகிய இரண்டும் அடுத்தடுத்து வெளியாக உள்ளதாம்.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments