Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே 1 ஆம் தேதி தொலைக்காட்சியில் வலிமை… அடுத்த செம்ம அப்டேட்டை கொடுத்த ஜி தமிழ்!

Webdunia
செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (17:43 IST)
‘வலிமை’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஒரு மாதம் கழித்து ஜி 5 ஓடிடி தளத்தில் மார்ச் 25 ஆம் தேதி வெளியானது. ஏற்கனவே 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து திரையரங்க ரிலீஸ் முடிந்து ஒரு மாதம் கழித்து ஜி 5 ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. வலிமை ஓடிடி ரிலீஸுக்காக சென்னையின் முக்கியப் பகுதியான YMCA மைதானத்தில் 10000 அடியில் பிரம்மாண்ட கட் அவுட்டை ஜி நிறுவனம் வைத்தது பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து இப்போது ஓடிடியில் 4கே தரப்பில் டால்பி ஒலி வடிவமைப்பில் வலிமை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வலிமை படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளும் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் வரும் மே 1 ஆம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு ஜி தமிழ் தொலைக்காட்சியில் முதல் முறையாக ஒளிபரப்பாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒளிபரப்பு நேரத்தை அறிவிக்காமல் இருந்த ஜி தமிழ் தற்போது மாலை 6.30 மணிக்கு ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் என அறிவித்துள்ளது. இந்த செய்தி அஜித் ரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 2 நாள் வசூல் இத்தனை கோடியா? தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பு..!

நடிகர்கள் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கரின் 'நேசிப்பாயா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் லான்ச் விழா!

கருப்பு நிற உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய நிதி அகர்வால்!

பாலைவனத்தில் க்யூட்டான போட்டோஷூட்டை நடத்திய மாளவிகா மோகனன்!

சிம்புவின் அடுத்த படத்தை இயக்கப் போவது இந்த இயக்குனர்தான்.. கழட்டிவிடப்பட்ட தேசிங் பெரியசாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments