Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 13 April 2025
webdunia

ரொம்ப குண்டாயிட்டீங்க… கேள்வி பதில் நிகழ்ச்சியில் மஞ்சிமா மோகனிடம் எல்லை தாண்டிய ரசிகர்கள்

Advertiesment
manjima mohan
, செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (17:33 IST)
நடிகை மஞ்சிமா மோகன் வெளியிட்டுள்ள புதிய புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்வு நடிப்பில் வெளியான "அச்சம் என்பது மடமையடா" என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். பப்ளியான தோற்றத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். அதையடுத்து நடிகர் உதயநிதி நடிப்பில் வெளியான "இப்படை வெல்லும்" சத்ரியன், தேவராட்டம் என ஒரு சில படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சியமான நடிகையாக பார்க்கப்பட்டார்.

ஆனால் அவரால் உச்ச நடிகையாக வரமுடியவில்லை. இரண்டாம் கட்ட ஹீரோக்களுடனே ஜோடி போட்டு வருகிறார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் உரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அப்போது பலரும் அவரிடம் சுவாரஸ்யமானக் கேள்விகளைக் கேட்க சிலர் மட்டும் “நீங்கள் ரொம்ப குண்டாகி விட்டீர்கள். உடம்பை குறைக்காவிட்டால், உங்களால் சினிமாவில் முன்னுக்கு வரமுடியாது” எனக் கூறினர். அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக “இது இத்தனை நாளாக எனக்கு தெரியவில்லையே. நமது சினிமா துறை வெறும் புற அழகை மட்டுமே ஏற்றுக்கொள்ளும் என்று. உங்கள் தகவலுக்கு நன்றி” என்பது போல கூலாக பதிலளித்துள்ளார்.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரம்மாண்டமாக திட்டமிடப்படும் மாநாடு 100 ஆவது நாள் விழா… வருவாரா சிம்பு?