Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வலிமை டீசர் ரிலீஸ் தேதி இதுதான்… ரிலிஸ் தேதியிலும் மாற்றம்!

வலிமை டீசர் ரிலீஸ் தேதி இதுதான்… ரிலிஸ் தேதியிலும் மாற்றம்!
, சனி, 17 ஜூலை 2021 (16:53 IST)
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் டீசர் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்து வரும் படம் வலிமை. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக படத்திற்கான அப்டேட் கேட்டு ரசிகர்கள் காத்திருந்த சூழலில் சமீபத்தில் வலிமை ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

இந்த படத்தில் இன்னும் 10 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே மீதமுள்ளது. இதை முடித்து மற்ற பணிகளை முடித்து ரிலிஸ் வேலைகளை தொடங்க உள்ளதாக வலிமை திரைப்படத்தின் இந்தி டப்பிங் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. தமிழில் வெளியாகும் அன்றே இந்தியிலும் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் வலிமை படத்தின் டீசர் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தின் போது வெளியாகும் என தெரிகிறது. அதுபோலவே ரிலீஸ் தேதியும் தீபாவளிக்கு இல்லாமல் ஆயுத பூஜைக்கு வெளியாகலாம் எனவும் சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹிப் ஹாப் ஆதி நடிக்கவேண்டிய படத்தில் ஒப்பந்தமான அதர்வா!