Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வலிமை வெளிநாடு ஷுட்டிங் ரத்தா? அடுத்த அப்டேட்!

Webdunia
சனி, 3 ஜூலை 2021 (09:57 IST)
வலிமை படத்தின் வெளிநாடு படப்பிடிப்பை இந்தியாவிலேயே நடத்த முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

நேர்கொண்ட பார்வை வெற்றிக்குப் பின்னர் அஜித் இப்போது வலிமை படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த படத்துக்கு அஜித்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கோரோனா லாக்டவுனால் தடைபட்டு மீண்டும் தொடங்கி 90 சதவீதம் வரை முடிந்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக மீதமுள்ள படப்பிடிப்பை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஆனாலும் ரசிகர்களுக்காக இதுவரை ஒரு போஸ்டர் கூட வெளியிடாமல் இழுத்தடித்து வருகிறது படக்குழு. இது சம்மந்தமாக முன்னதாக போனி கபூரை கேலி செய்யும் விதமாக சில இடங்களில் போஸ்டர்கள் ஒட்டுவதும், அரசியல் மேடைகள் மற்றும் கிரிக்கெட் மைதானங்களில் வலிமை அப்டேட் கேட்பது என அஜித் ரசிகர்கள் ஆர்வக்கோளாறில் சுற்றி வந்தனர். இதையடுத்து மே 1 அன்று அஜித் பிறந்தநாளில் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் ரசிகர்களின் ஆர்வம் காரணமாக விறுவிறுவென படத்தை முடித்து ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. அதனால் வெளிநாடுகள் சென்று திட்டமிட்டு இருந்த படப்பிடிப்பைக் கூட இந்தியாவிலேயே நடத்த முடிவு செய்து அதற்காக ஆயத்தம் ஆகி வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாடிவாசல் பற்றி பரவும் வதந்தி… கூலாக அடுத்த படத்தின் ஷூட்டிங்கைத் தொடங்கிய சூர்யா!

குபேரா படத்தின் நீளம் இவ்வளவா?... ரசிகர்களைக் கட்டிப்போடுமா?... ரன்னிங் டைம் தகவல்!

வெங்கட்பிரபு & சிவகார்த்திகேயன் இணையும் படம் இந்த ஜானரா?... வெளியான தகவல்!

என்ன மின்னல் வேகத்துல போறாங்க… வெற்றிமாறன் & சிம்பு இணையும் படத்தின் ஷூட்டிங் அப்டேட்!

ஆர்யாவின் 36வது திரைப்படம்.. டீசர் வீடியோ வெளியீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments