Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வலிமையா? வால்டர் வெற்றிவேலா? இணையத்தில் வெளியான அதிருப்தி!

வலிமையா? வால்டர் வெற்றிவேலா? இணையத்தில் வெளியான அதிருப்தி!
, வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (09:51 IST)
வலிமை திரைப்படம் சினிமா ரசிகர்களை பெரிதாக திருப்திப் படுத்தவில்லை என்று சொல்லப்படுகிறது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று அஜித்தின் வலிமை திரைப்படம் உலகமெங்கும் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ஆனால் கொண்டாட்டமெல்லாம் தியேட்டருக்கு உள்ளே செல்லும்வரைதான். அதன் பின் வலிமை திரைப்படம் தன் ரசிகர்களை முழுவதுமாக திருப்திப் படுத்தவில்லை.

இதற்குக் காரணம் மேக்கிங்கில் படக்குழு செலுத்திய கவனத்தை கதையிலும் திரைக்கதையிலும் செலுத்தாதே என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதிலும் திரைக்கதை எல்லாம் 30 ஆண்டுகளுக்கு முன்னர் வந்த சத்யராஜின் வால்டர் வெற்றிவேல் திரைப்படத்தைப் போலவே இருப்பதாக கூறப்படுகிறது.  அஜித்தின் தம்பி வில்லனாக மாறுவது எல்லாம் அந்த காலத்திலேயே வால்டர் வெற்றிவேல் படத்தில் இருந்ததுதான் என பலரும் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் தங்கம் விலை இன்று திடீர் சரிவு!