Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வலிமை பட நடிகரின் புதிய பாடிபில்டிங் புகைப்படம் !

Advertiesment
ajithkumar
, செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (21:39 IST)
போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை. இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகி ஒரு வருடத்திற்கும் மேலாகி விட்ட நிலையில் எந்த விதமான அப்டேட்டும் வெளியாகததால் அஜித் ரசிகர்கள் அப்டேட் கேட்டு அடிக்கடி படக்குழுவினரை கேட்டு வந்தனர்.

ஆனால் தற்போது சமீப காலமாக பார்க்கும் முக்கிய பிரமுகர்களிடம் கூட வலிமை அப்டேட் கேட்க தொடங்கிவிட்டனர். கிரிக்கெட் மைதானத்தில், அரசியல்வாதிகளின் கூட்டத்தில் என வலிமை அப்டேட் கேட்கப்படுவது வைரலாகி வரும் நிலையில் நடிகர் அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அப்டேட் வரும் வரை காத்திருக்குமாறும், மற்றவர்களை அப்டேட் கேட்டு தொந்தரவு செய்வது வருத்தத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்திருந்தார். அதை தொடர்ந்து மதுரை அஜித் ரசிகர்கள் பேனர் ஒன்றை வெளியிட்டனர்

அதில், டேஞ்சர் சிட்டி அஜித் ரசிகர்கள் என பெயர் கொண்ட அவர்கள் அஜித்தின் அறிக்கையை பேனரில் இணைத்து “உங்கள் வார்த்தைக்கு கட்டுப்படுகிறோம். உங்கள் வருகைக்காக காத்திருக்கிறோம்” என குறிப்பிட்டிருந்தனர்.#Valimai #KartikeyaGummakonda #ChaavuKaburuChallaga #Kartikeya


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லிங்குசாமியின் அடுத்த படம் குறித்த தகவல்: ஹீரோ இவர்தான்