Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய அஜித்…. வலிமை பர்ஸ்ட் லுக் நஹியா?!

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2021 (12:05 IST)
நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மே 1 ஆம் தேதி ரிலிஸாகும்  என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். ஆனால் படம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் படத்தின் டைட்டில் போஸ்டர் கூட இன்னும் படத்தயாரிப்பாளரால் வெளியிடப்படவில்லை. இந்த படத்தில் கதாநாயகியாக ஹூமா குரேஷியும் வில்லனாக நடிகர் கார்த்திகேயாவும் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகள் மே மாதத்தில் இருந்து தொடங்கும் என சொல்லப்படுகிறது. படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் இப்போது கொரோனா இரண்டாவது அலை மிகவேகமாக பரவி வரும் நிலையில் படம் ரிலீஸாவது உறுதியா என்று தெரியவில்லை. இதனால் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாவதாக இருந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட வேண்டாம் என்று அஜித் தயாரிப்பாளரிடம் கூறியுள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அந்த ரெண்டு படங்களோட கதையை மிக்ஸ் பண்ணா வீர தீரன் சூரன்.. அட விக்ரமே சொல்லிட்டாரே!

அண்ணன பாத்தியா.. அப்பாட்ட கேட்டியா? தமிழ் பாட்டு மாறியே இருக்கே! வைரலாகும் தாய்லாந்து பாடலின் பின்னணி!

உடலை தானம் செய்வதாக அறிவித்த கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி!

டிராகன் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறாரா தனுஷ்?

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட உள்ளதா?

அடுத்த கட்டுரையில்
Show comments