Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் குறையாத கூட்டம்… வலிமை மேஜிக்!

நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் குறையாத கூட்டம்… வலிமை மேஜிக்!
, ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (20:06 IST)
அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று அஜித்தின் வலிமை திரைப்படம் உலகமெங்கும் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ஆனால் கொண்டாட்டமெல்லாம் தியேட்டருக்கு உள்ளே செல்லும்வரைதான். அதன் பின் வலிமை திரைப்படம் தன் ரசிகர்களை முழுவதுமாக திருப்திப் படுத்தவில்லை.

ஆனாலும் வலிமை திரைப்படம் வசூலில் சோடை போகவில்லையாம். இந்நிலையில் தமிழகத்தில் மட்டுமே சுமார் 36 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம். இந்த வசூல் சமீபத்தில் வெளியாகி ஹிட்டடித்த மாஸ்டர் மற்றும் அண்ணாத்த ஆகிய படங்களின் வசூலை விட அதிகம்.

வியாழக்கிழமை வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதால் அடுத்தடுத்த நாட்களில் வசூல் குறையும் என்று சொல்லப்பட்டது. ஆனால் அதை பொய்யாக்கும் விதமாக வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி வருகிறது. நாளை மீண்டும் வார நாட்கள் தொடங்குவதால் நாளையில் இருந்து கூட்டம் குறைய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’எதற்கும் துணிந்தவன்’ டிரைலர் ரிலீஸ் தேதியை அறிவித்த சன் பிக்சர்ஸ்