தொடங்குகிறது வலிமை டிக்கெட் முன்பதிவு! – தீவிர வெயிட்டிங்கில் ரசிகர்கள்!

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (10:37 IST)
அஜித் நடித்து வெளியாகவுள்ள வலிமை படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கும் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள படம் வலிமை. இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு வெளியாக திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. பிறகு தற்போது பிப்ரவரி 24 அன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வலிமை தமிழில் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாக உள்ளது. சமீபத்தில் வலிமை பிற மொழி டிரெய்லர்கள் வெளியானது. இந்நிலையில் வலிமை டிக்கெட் முன்பதிவு 20ம் தேதியன்று தொடங்க உள்ளதாக சில திரையரங்குகள் அறிவித்துள்ளன. டிக்கெட் முன்பதிவு வலைதளங்களிலும் இன்னும் புக்கிங் தொடங்கப்படாத நிலையில் அவற்றிலும் 20ம் தேதி முதல் முன்பதிவு தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரூ.800 கோடி வசூல் செய்த 'காந்தாரா சாப்டர் 1': ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு!

மாடர்ன் உடையில் க்யூட் போஸ் கொடுத்த அனுபமா பரமேஸ்வரன்!

வித்தியாசமான உடையில் கிளாமர் போஸில் அசத்தும் க்ரீத்தி ஷெட்டி…!

சம்பளம் வாங்காமல் ‘கேர்ள் பிரண்ட்’ படத்தில் நடித்த ராஷ்மிகா..!

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகும் ‘காதல்.. Reset… Repeat’… கவனம் ஈர்த்த ப்ரோமோ!

அடுத்த கட்டுரையில்
Show comments