Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வலிமை அஜித்தின் சீக்ரெட் கெட்டப்… போஸ்டரோடு ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
புதன், 21 ஜூலை 2021 (16:07 IST)
அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் ரிலிஸ் தேதி அடுத்தமாதம் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்து வரும் படம் வலிமை. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக படத்திற்கான அப்டேட் கேட்டு ரசிகர்கள் காத்திருந்த சூழலில் சமீபத்தில் வலிமை ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது. இந்த படத்தில் இன்னும் 10 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே மீதமுள்ளது. இந்த படப்பிடிப்பும் இன்னும் சில நாட்களில் வெளியாகிவிடும் என சொல்லப்படுகிறது.

இதனால் படத்தை முதலில் தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டது. ஆனால் தீபாவளிக்கு ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் வெளியாக உள்ளதால் முன்னதாகவே அண்ணாத்த திரைப்படம் வெளிவர உள்ளதால் ரிலீஸை  முன் தள்ளி ஆயுத பூஜைக்கு வெளியிடலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் ஆயுத பூஜைக்கு ஆர் ஆர் ஆர் திரைப்படம் வெளியாக உள்ளதால் அதிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாம். இதனால் ஆயுத பூஜையா அல்லது தீபாவளியா என்ற சந்தேகம் அஜித் ரசிகர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தில் அஜித்தின் மற்றொரு கெட்டப்போடு கூடிய போஸ்டரை அடுத்த மாதம் வெளியிட உள்ளதாகவும் அதனோடு படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களை இயக்கும் முருகதாஸ்… பேன் இந்தியா நடிகரோடு கூட்டணி!

அடுத்த கட்டுரையில்
Show comments