Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நதிகளில் நீராடும் சூரியன் படத்தின் போட்டோஷூட் தொடக்கம்!

Webdunia
புதன், 21 ஜூலை 2021 (16:02 IST)
சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்க உள்ள நதிகளிலே நீராடும் சூரியன் படத்தின் போட்டோஷூட் இன்று சென்னையில் தொடங்கியுள்ளது.

சிம்பு மற்றும் கவுதம் மேனன் ஆகிய இருவரும் ஏற்கனவே விண்ணைத் தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா ஆகிய இரண்டு படங்களில் இணைந்து பணி புரிந்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ஒரு திரைப்படத்தில் பணிபுரிய உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த திரைப்படத்திற்கு ’நதியினிலே நீராடும் சூரியன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமான் இசையமைக்க இருப்பதாகவும் தாமரை பாடல்கள் எழுத இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் படத்தைப் பற்றி பேசியுள்ள தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ‘எல்லா வேலைகளும் முடிந்துவிட்டன. கொரோனாவால் படப்பிடிப்பு செல்வது தாமதமானது. இன்னும் 10 நாட்களில் சென்னையில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. சூழ்நிலைகள் சரியாக அமைந்தால் வெளிநாட்டிலும் படப்பிடிப்பு நடக்கும் எனக் கூறியுள்ளார். அதையடுத்து இன்று சென்னையில் நடிகர் சிம்புவை வைத்து போட்டோஷூட்டை நடத்தியுள்ளார் இயக்குனர் கௌதம் மேனன்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சென்னை - மதுரை விமான கட்டணம் 4 மடங்கு உயர்வு.. பயணிகள் அதிர்ச்சி..!

ஆக்‌ஷன் ஹீரோவுக்கான வெற்றிடத்தை சூர்யா சேதுபதி நிரப்புவார் – இயக்குனர் விக்ரமன் ஆருடம்!

வார் 2 படத்தின் தெலுங்கு விநியோக உரிமை 90 கோடி ரூபாய்?... ஆச்சர்யத் தகவல்!

ரண்வீர் சிங்குக்கு ஜோடியாக இந்தி சினிமாவில் அறிமுகமாகும் தெய்வ திருமகள் புகழ் சாரா!

யாஷின் டாக்ஸிக் படத்துக்கு அனிருத்தான் இசையமைப்பாளரா?

அடுத்த கட்டுரையில்
Show comments