Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இறுதிப் பூக்கள் விழுவது கண்டு இதயம் உடைகிறேன்! – மாரிமுத்து இழப்பிற்கு வைரமுத்து இரங்கல்!

Vairamuthu
, வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (11:14 IST)
பிரபல நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து மாரடைப்பால் மரணமடைந்த செய்தி கேட்டு கலங்கிய வைரமுத்து தன் இரங்கலை கவிதையாக அளித்துள்ளார்.



தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக உதவி இயக்குனராக, குணச்சித்திர நடிகராக இருந்து வரும் மாரிமுத்து சில படங்களையும் இயக்கியுள்ளார். தற்போது எதிர்நீச்சல் சீரியலில் நடித்து பிரபலமான மாரிமுத்து இன்று காலை திடீரென மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இது திரை உலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தனது திரை வாழ்க்கையை கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக தொடங்கியவர் மாரிமுத்து. அவரின் மறைவு கேட்டு கலங்கிய வைரமுத்து அவருக்கு கவிதை மூலமாக இரங்கலை தெரிவித்துள்ளார்.

தம்பி மாரிமுத்துவின்
மரணச் செய்தி கேட்டு
என் உடம்பு ஒருகணம்
ஆடி அடங்கியது

சிகரத்தை நோக்கிச்
சென்றுகொண்டிருந்தவனை
மரணத்தின் பள்ளத்தாக்கு
விழுங்கிவிட்டது

என் கவிதைகளின்
உயிருள்ள ஒலிப்பேழை அவன்

என் உதவியாளராய் இருந்து
நான் சொல்லச் சொல்ல எழுதியவன்

தேனியில் நான்தான்
திருமணம் செய்துவைத்தேன்
இன்று அவன்மீது
இறுதிப் பூக்கள் விழுவதுகண்டு
இதயம் உடைகிறேன்

குடும்பத்துக்கும்
கலை அன்பர்களுக்கும்
கண்ணீரைத் துடைத்துக்கொண்டே
ஆறுதல் சொல்கிறேன்

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டப்பிங் செய்யும்போது மாரடைப்பு.. தானே காரை எடுத்து கொண்டு சென்ற ஜி மாரிமுத்து..!