Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிரத்னம் முதல் கௌதம் மேனன் வரை… என்னிடம் ஒருவார்த்தைக் கூட கேட்கவில்லை –வைரமுத்து ஆதங்கம்!

Webdunia
திங்கள், 9 ஜூன் 2025 (08:23 IST)
தமிழ் சினிமாவில் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட காலத்தில் கோலோசிய பாடல் ஆசிரியராக இருந்தவர் வைரமுத்து. ஆனால் சமீபகாலமாக அவருக்கு பாடல் வாய்ப்புகள் அதிகமாக வருவதில்லை. அதற்கு வைரமுத்து பாடகி சின்மயியால் மீ டு குற்றச்சாட்டுக்கு ஆளானதும் ஒரு காரணம். இதன் காரணமாக ஏ ஆர் ரஹ்மான் மற்றும் மணிரத்னம் ஆகியோர் அவரை விட்டுப் பிரிந்தனர்.

அதனால் அவர் இப்போது இலக்கியம், தனி ஆல்பம் போன்றவற்றில் பிஸியாக இருக்கிறார். இதற்கிடையில் அவர் முகநூலிலும் தீவிரமாக இயங்கி வருகிறார். அடிக்கடி தன்னுடைய மலரும் நினைவுகளை முகநூல் வாயிலாக பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளதாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் சமீபத்தில் அறிவித்திருந்தார். இந்நிலையில் அவர் தன்னுடைய பாடல் வரிகளை பலர் படத் தலைப்புகளாக வைத்துள்ளது குறித்து ஆதங்கத்தை  வெளிப்படுத்தியுள்ளார்.

இது சம்மந்தமான அவருடைய முகநூல் பதிவில் “என்னுடைய பல்லவிகள் பலவற்றைத் தமிழ்த் திரையுலகம் படத் தலைப்புகளாகப் பயன்படுத்தி இருக்கிறது. அப்படி எடுத்தாண்டவர்கள் யாரும் என்னிடம் அனுமதி பெறவில்லை என்பதோடு மரியாதைக்குக்கூட  ஒரு வார்த்தையும் கேட்டதில்லை.

ஒன்றா இரண்டா...

பொன்மாலைப் பொழுது, கண் சிவந்தால் மண் சிவக்கும், இளைய நிலா, ஊரத் தெரிஞ்சுகிட்டேன், பனிவிழும் மலர்வனம், வெள்ளைப் புறா ஒன்று, பூவே பூச்சூட வா, ஈரமான ரோஜாவே, நிலாவத்தான் கையில புடிச்சேன், மெளன ராகம், மின்சாரக் கண்ணா, கண்ணாளனே, என்னவளே, உயிரே, சண்டக்கோழி, பூவெல்லாம் கேட்டுப் பார், தென்மேற்குப் பருவக்காற்று, விண்ணைத் தாண்டி வருவாயா, நீ தானே என் பொன் வசந்தம், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், தங்கமகன்.

இப்படி இன்னும் பல... சொல்லாமல் எடுத்துக் கொண்டதற்காக இவர்கள் யாரையும் நான் கடிந்து கொண்டதில்லை. காணும் இடங்களில் கேட்டதுமில்லை. செல்வம் பொதுவுடைமை ஆகாத சமூகத்தில் அறிவாவது பொதுவுடைமை ஆகிறதே என்று அகமகிழ்வேன்.  ஏன் என்னைக் கேட்காமல் செய்தீர்கள் என்று கேட்பது எனக்கு நாகரிகம் ஆகாது. ஆனால் என்னை ஒருவார்த்தை கேட்டுவிட்டுச் செய்வது அவர்களின் நாகரிகம் ஆகாதா?” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் தொடங்கும் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தின் ஷூட்டிங்!

மணிரத்னம் முதல் கௌதம் மேனன் வரை… என்னிடம் ஒருவார்த்தைக் கூட கேட்கவில்லை –வைரமுத்து ஆதங்கம்!

பாகுபலி இரண்டு பாகங்களையும் இணைத்து ரி ரிலீஸ்… எதிர்பார்ப்பை எகிற வைத்த தகவல்!

புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த சண்முக பாண்டியனின் ‘படை தலைவன்’ படக்குழு!

ஜனநாயகன் படத்தின் தமிழக விநியோக உரிமையைக் கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments