Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாராதிராஜா தேறி வருகிறார்… மீண்டும் நேரில் சந்தித்த வைரமுத்து தகவல்!

Webdunia
வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (14:54 IST)
பாரதிராஜா சென்னையில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இயக்குனர் இமயம் பாரதிராஜா தற்போது திரைப்படங்களில் முக்கியமான குணச்சித்திர நடிகராக இருந்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த ராக்கி மற்றும் திருச்சிற்றம்பலம் ஆகிய படங்கள் அவருக்கு நல்ல நடிகர் என்ற பெயரை வாங்கிக் கொடுத்துள்ளனர். வெற்றிமாறனின் விடுதலை படத்திலும் நடிப்பதாக இருந்து பின்னர் விலகினார்.

சில தினங்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை, அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவரை சந்தித்து நலம் விசாரித்த பாடல் ஆசிரியர் வைரமுத்து ட்வீட் செய்திருந்தார்.

இந்நிலையில் இன்று மீண்டும் அவர் பாரதிராஜாவை சந்தித்து தேறி வருவதாகக் கூறியுள்ளார். இது சம்மந்தமாக “ பாரதிராஜா நெஞ்சில் கொஞ்சம் சளி உள்ளது. அதை சரிசெய்ய மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். நன்றாக பேசுகிறார். விரைவில் மீண்டு வருவார்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காயடு லோஹர் வெளியே.. மமிதா பாஜூ உள்ளே.. தனுஷின் அடுத்த பட நாயகி அப்டேட்..!

டிமாண்டி காலனி 3.. சம்பளத்தை குறைத்து கொண்டார்களா அருள்நிதி, அஜய்ஞானமுத்து?

அஜித் அடுத்த படம் குறித்து வதந்தி பரப்பும் வேலையற்றவர்கள்.. தயாரிப்பு தரப்பு கொடுத்த பதிலடி..!

கிளாமர் உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த மிருனாள் தாக்கூர்!

சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments