Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வைரமுத்து பாடலை 28 ஆண்டுகளுக்கு பிறகு பாடிய இசைஞானி இளையராஜா!

Advertiesment
28 ஆண்டுகள்
, திங்கள், 5 ஜூன் 2017 (10:05 IST)
தமிழ் சினிமாவில் இசைஞானி இளையராஜா-வைரமுத்து இணைந்து அளித்த ஹிட் பாடல்கள் யாராலும் மறக்க முடியாதவை. ஆனால் 1980-90ஆம் ஆண்டு காலகட்டத்தில் இருவருக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இனி இணைந்து  பணியாற்றப் போவதில்லை என இருவரும் முடிவெடுத்தனர்.

 
இந்நிலையில் சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘தர்மதுரை’ படத்தில் வைரமுத்துவின் பாடல் வரிகளுக்கு இளையராஜாவின் மகன் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து சிம்புவின் AAA படத்தில் வைரமுத்து-யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தில் வைரமுத்து எழுதிய பாடல் ஒன்றை  இசைஞானி இளையராஜா பாடியுள்ளார்.
 
இதனால் இருவருக்கிடையேயான மனக்கசப்பு மறைந்துவிட்டதாகவும். எதிர்காலத்தில் வைரமுத்துவின் வரிகளுக்கு இளையராஜா இசையமைக்க வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகிஸ்தான் புண்ணியத்தில் கிரிக்கெட் கடவுளை சந்தித்த தனுஷ்