Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லாரன்ஸ் படத்தில் இருந்து விலகிய வடிவேலு… இதுதான் காரணமா?

Webdunia
வியாழன், 10 நவம்பர் 2022 (16:28 IST)
இயக்குனர் கே எஸ் ரவிக்குமார்  இயக்கத்தில் லாரன்ஸ் தன்னுடைய தம்பி எல்வினை கதாநாயகனாக்கி அந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார்.

நடிகர் லாரன்ஸ் நடிகராகவும், இயக்குனராகவும் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் தன்னுடைய தம்பியான எல்வினை கதாநாயகனாக ஆக்கும் முயற்சியில் சில ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தார். அதையடுத்து இப்போது கமர்ஷியல் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் எல்வின் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தில் லாரன்ஸும் ஒரு முக்கியக் கதாபத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.

இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க வடிவேலுவை அனுகியுள்ளனர். ஆனால் அவர் கேட்ட சம்பளம் மிக அதிகமாக இருந்ததால் தயாரிப்பு தரப்பு தயங்கவே, அந்த படத்தில் இருந்து விலகியுள்ளாராம் வடிவேலு. மேலும் இந்த படத்தின் தயாரிப்பு தரப்பும் மாறி பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘மகாராஜா’ இயக்குனர் நித்திலனை அழைத்துப் பாராட்டிய ஆஸ்கர் வென்ற திரைக்கதை எழுத்தாளர்!

வட சென்னை 2 எப்போது தொடங்கும்… குபேரா பட விழாவில் தனுஷ் கொடுத்த அப்டேட்!

’மதயானை கூட்டம்’ இயக்குனர் விக்ரம் சுகுமாரன் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்..!

முத்த மழை பாடல்! தீ பெஸ்ட்டா? சின்மயி பெஸ்ட்டா? - ஒப்பீடு குறித்து பாடகி சின்மயி கருத்து!

கமல் படத்தை ரிலீஸ் செய்தால் தியேட்டரை கொளுத்துவோம்! - கர்நாடக தியேட்டர்களுக்கு மிரட்டல்!

அடுத்த கட்டுரையில்
Show comments